பொதுமக்கள் கோரிக்கை

Update: 2022-09-10 14:37 GMT

திருவள்ளூர் அரசு மருத்துவமனை எதிரே போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் சீரமைக்கப்படுமா திருவள்ளூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்வது வழக்கம். இந்த நிலையில் இந்த அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி எதிரே சாலையை மறித்தவாறு கார், மற்றும் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்