சென்னை மௌலிவாக்கம் தனியார் பல்பொருள் அங்காடி அருகே உள்ள சாலையில் பள்ளம் விழுந்து அபாயகரமாக காட்சி தருகிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. சீரான போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தும் இந்த சாலையை உயிர் பலி ஏற்படும் முன்பு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.