சென்னை அம்பத்தூர் ஒரகடம் வெங்கடேஷ்வரா நகர் பகுதியில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீர் காலவாய் அமைக்கும் பணி சமீபத்தில் முடிக்கப்பட்டது. ஆனால் வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு வழங்குவதில் கால தாமதம் ஆகிறது. மேலும் கழிவுநீர் எடுக்க வரும் வாகனமும் இந்த பகுதியில் வருவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமத்தில் உள்ளார்கள். மக்கள் சிரமம் போக்க வழி என்னவோ!