சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணா நகர் 2-வது பிரதான சாலையில் மழை நீர்த் தேங்கியுள்ளது. மழை நீர் வடிகால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டும்போது மெட்ரோ தண்ணீர் குழாய் சேதமடைந்து விட்டது. இதனால் அருகே உள்ள குடியிருப்புகளுக்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் தடை பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?