செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் மேலமையூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாட்கள் பணி முடிந்தவர்கள் சுழற்சி முறையில் பணிதள பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஊராட்சியில் ஒரே நபர் பல வருடங்களாக பணிதள பொறுப்பாளராக வேலை செய்து வருவதாக இப்பகுதி மக்களால் கூறப்படுகிறது. சம்பந்தபட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்களா?