பக்தர்களின் வேண்டுகோள்

Update: 2022-09-08 14:04 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் அமைந்துள்ள கந்தசாமி திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி கும்பிட்டு செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்களிடம் சிறுநீர் கழிப்பதற்கு ரூ.5 கட்டணமும், மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் குளிப்பதற்கு ரூ.30 கட்டணம் என தனி நபர்கள் மூலம் வசூல் செய்யப்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்கவும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச குளியலறை மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்