திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு ஊராட்சி ஒன்றியம் தாழவேடு காலனியில் அமைந்துள்ள நூலகம் கடந்த 8 வருடங்களாக பூட்டியே கிடக்கிறது. எங்கள் காலனியில் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் கல்லூரி செல்லும் இளைஞர்கள் அதிகமானோர் வசிக்கிறார்கள். எனவே மாணவர்களின் நலன் கருதியும் முதியோர்கள் செய்தி தாள் மற்றும் பத்திரிக்கை படிக்க உதவும் வகையில் நூலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வழி செய்ய வேண்டும்.