திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, காமராஜர் நகர் 4-வது தெருவில் கழிவுநீர் கசிந்து வருகிறது. இதனால் இந்த பகுதியை கடந்து செல்லும் மக்கள் மூக்கை பொத்திக் கொண்டு செல்லும் சூழல் அமைகிறது. மேலும் தேங்கியிருக்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதோடு, தெருவே அசுத்தமாகவும், அலங்கோலமாகவும் காட்சி தருகிறது. எனவே கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?