கீழ்பாக்கம் ஜி.3 காவல்நிலையம் காவலர் குடியிருப்பு, கே. பிளாக் அருகே கழிவு நீர் குழாய் உடைந்து சாலையெங்கும் கழிவு நீர் தேங்கி வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தேங்கி இருக்கும் கழிவுநீரால் இப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். கழிவுநீர் அகற்றும் வாரியம் உடனடியாக இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டுகிறோம்.