பல்லாவரம் பம்மல் பகுதியிலுள்ள திருநீர்மலை சாலையானது போக்குவரத்துக்கு உகந்ததாக இல்லை. சாலையில் ஆங்காங்கே பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. மேலும் பள்ளத்தில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. நடந்து செல்பவர்கள் கூட சீரான பயணத்தை மேற்கொள்ள முடியாமல் புலம்பியவாரே சென்று வருகிறார்கள். எனவே சாலைய சீர் செய்ய உடனடி நடவடிக்கை தேவை.