திருவள்ளூரில் இருந்து செங்குன்றம் செல்லும் நெடுஞ்சாலை ஓரம் சின்ன ஈக்காடு சாலையில் குளம் போல் கழிவுநீர் தேங்கியுள்ளது. இந்த கழிவுநீரானது நீண்ட நாட்களாக அப்புறப்படுத்தப்படாமலே இருப்பதால் அந்த பகுதியில் பெரும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே சாலையை ஆக்கிரமித்துள்ள கழிவுநீரை உடனடியாக அகற்ற வேண்டும்.