சென்னை அரும்பாக்கம் ஈ.வெ.ரா. பெரியார் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே இருக்கும் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்துள்ளது. கால்வாயிலிருந்து கழிவுநீர் கசிந்து சாலை முழுவதும் பரவி வருகிறது. மேலும் பள்ளி குழந்தைகள் கழிவுநீரில் நடந்து செல்வதால் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே கழிவுநீர் அகற்றும் வாரியம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.