செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவமனையில் உள்ள தாய் சேய் அவசர கால சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பிறந்த குழந்தைகள் இருக்கும் வார்டுகளில் ஜன்னல் திறந்துள்ள நிலையில், குரங்குகள் அங்கும் இங்கும் சுவரில் ஏறி விளையாடுகின்றன. விபரீதங்கள் ஏற்படும் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை.