செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காட்டாங்கொளத்தூர், இந்திரா நகரின் பிரதான சாலையில் உள்ள கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சில சமயங்களில் கழிவுநீர் சாலைகளில் வழிந்து ஓடுவதால் அந்த இடமே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?