மீண்டும் ஒளிர்ந்த மின்கம்பம்

Update: 2022-09-05 14:17 GMT

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், கன்னிவாக்கம் கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்லும் வழியில் உள்ள மின்கம்பத்தின் மின்விளக்குகள் எரியாமல் இருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. மின்சார வாரியத்தின் உடனடி நடவடிக்கையால் தற்போது மின்விளக்குகள் ஒளி வீச தொடங்கியுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் துரிதமாக செயல்பட்ட மின்சார வாரியத்துக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பாராட்டை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்