சென்னை கொரட்டூர் ரெயில் நிலையம் செல்லும் சாலை ஓரத்தில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் கடையின் விளம்பர பலகையை சாலையில் வைத்துள்ளனர். இதனால் சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகிறார்கள். மேலும் விபத்து ஏற்படும் சூழலும் அமைகிறது. எனவே சாலையை ஆக்கிரமித்து விளம்பர பலகை வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.