திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியிலுள்ள கூவம் கிராமத்தில் இருந்து மப்பேடு வரை செல்லும் நெடுஞ்சாலை ஓரம் முட்செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளது. இந்த நிலையில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் முட்செடிகள் மீது உரசி செல்வதால் காயம் ஏற்படும் சம்பவங்களும் நிகழ்கின்றன. எனவே நெடுஞ்சாலை ஓரம் உள்ள முட்செடிகளை அகற்ற சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.