திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே பயணியர்கள் நிழற் குடை அருகே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருவது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. சம்பந்தபட்ட நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையால் கழிவுநீர் பிர்ச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பயணிகள் நடவடிக்கை மேற்கொண்ட நிர்வாகத்துக்கும், துணை நின்ற தினத்தந்திக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.