சென்னை பெசன்ட் நகர் 1வது மெயின் ரோட்டில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடப்படாமல் இருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. இதற்கு உடனடி தீர்வு கிடைக்கும் விதமாக கழிவுநீர் கால்வாய்க்கு மூடி பொருத்தப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த ஊழியர்களுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.