செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் உள்ள தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. இருட்டை பயன்படுத்தி வழிப்பறி போன்ற சம்பவங்களும் நடைபெறுகிறது. எனவே எரியாமல் உள்ள தெரு விளக்குகளை எரிவதற்கு மின்சார வாரியம் வழி செய்ய வேண்டும்.