சென்னை புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டி பஸ் நிறுத்தம், பி.எஸ். மூர்த்தி நகர் டி.இ. பிளாக் அருகே குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த இடத்தில் கழிவுநீர் தேங்கி குப்பைகளோடு கலந்து இருக்கிறது. இதனால் இந்த இடத்தை நெருங்கினாலே பெரும் துர்நாற்றம் வீசி குடலை புரட்டுகிறது. அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் தேங்கி இருக்கும் குப்பைகளால் நோய் தொற்று ஏற்படுமோ என்று அச்சப்படுகிறார்கள். மக்களின் அச்சம் தீர வழி என்னவோ!