பூந்தமல்லியிலிருந்து ஆவடி செல்லும் சாலையில், பருத்தி பட்டு ஷெல் பெட்ரோல் நிலையம் அருகே கழிவுநீர் தேங்கி வருகிறது. பல மாதங்காளாக தேங்கியிருக்கும் கழிவுநீரால் அந்த பகுதியே அசுத்தமாக மாறி வருகிறது. அருகில் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு தான் என்ன?