திருவள்ளூரில் இருந்து ஆவடி செல்லும் சாலையில் காக்களூர், தொழுதாவூர், வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள கால்நடைகள் சாலையிலேயே படுத்து ஓய்வு எடுக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கால்நடைகளின் மீது மோதி காயம் ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை.