சென்னை சிந்தாதிரிப்பேட்டை வெங்கடேச கிராமணி தெருவில் மூடப்பட்ட பழைய மதுபான கடை எதிரே குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. பொதுமக்களின் புகாரையடுத்து மாநகராட்சி நிர்வாகம் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டன. ஆனால் மீண்டும் அந்த இடத்தில் குப்பைகள் தேங்கி வருகின்றன. இதனால் அந்த பகுதியின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.