சென்னை அருந்ததி நகர் மேட்டுப்பாளையம், திரு.வி.க. நகர் பகுதியில் உள்ள கோவிந்தன் தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் மின்சார இணைப்பு பெட்டி இருப்பதால் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்குவதில் கால தாமதம் ஆகிறது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.