மேடவாக்கம் அருகில் உள்ள ஜல்லடம்பேட்டை பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் சாலை பல மாதங்களாக சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையானது குண்டும் குழியுமாக இருப்பதால் கழிவுநீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்துகிறது. எனவே சிதிலமடைந்த சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.