சென்னை வேளச்சேரி ஓராண்டியம்மன் கோவில் அவென்யூ இருக்கும் சாலையில் மழைநீர் வடிகால்வாய் இல்லை. இதனால் மழை காலத்தில் எங்களுக்கு நிம்மதியும் இல்லை. மழை பொழிவதும், வீட்டுக்கும் முன்பு மழைநீர் தேங்குவதும், எப்போது மழைநீர் வடியும் என்று காத்திருப்பதே எங்களின் வழக்கமாக உள்ளது. அடுத்த மழை காலம் வருவதற்குள் எங்களின் இந்த நிலைமை மாற வழி கிடைக்குமா?