சென்னை டீச்சர்ஸ் காலனி கணபதி நகர், கடப்பா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை பின்புறம் காலி மனை ஒன்று உள்ளது. அந்த பகுதியில் உள்ள மக்கள் இந்த காலி மனையில் குப்பைகள் கொட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். குப்பைகள் சேர்ந்து சேர்ந்து நாளடைவில் அந்த இடமே அலங்கோலமாக மாறி விட்டது. மேலும் மழை காலத்தில் குப்பகளோடு மழை நீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதற்கும், கொசுக்கள் உற்பத்தியாவதற்கும் வழி வகுக்கிறது. நோய் தொற்று பரவும் முன் இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.