காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள சாலையோர பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி உள்ளன. மேலும் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பிளாஸ்டிக் கழிவுகளை மூட்டையாக கட்டி சாலையில் வீசி செல்கின்றனர். பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்படாமலே இருப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற வழி செய்ய வேண்டும்?