சென்னை வியாசர்பாடி பகுதியில் அமைந்துள்ள பி.வி. காலனி 31-வது தெருவில் உள்ள நவீன குளியலறை மற்றும் கழிப்பறை பாழடைந்து காணப்படுகிறது. பயன்பாட்டில் இல்லாத இந்த கழிப்பறையை இரவு நேரத்தில் மதுப்பிரியர்கள் மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மேற்கூறிய பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும்.