வடபழனி குமரன் காலனி 3-வது தெருவில் உள்ள சாலை பள்ளமாக இருப்பதால் மழைநீர் எளிதில் தேங்கி விடுகிறது. சமீபத்தில் பெய்த மழையில் சாலையே தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கி விட்டது. ஒவ்வோரு மழைக்கும் சாலை காணாமல் போய்விடுகிறது. கழிவுநீர் அகற்றும் வாரியம் வந்து கழிவுநீரை அகற்றிய பின்னர் தான் சாலையே கண்ணுக்கு தெரிகிறது. எனவே சாலையில் தேங்கும் மழைநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும்.