செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப் பெருமாள் கோவில் பகுதிக்குட்பட்ட திருத்தேரி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள சிமெண்ட் சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. அந்த சாலையில் மக்கள் நடந்து செல்லும்பொது வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் மக்கள் மீது மழைநீரை வாரி இரைக்கின்றனர். இதனால் அந்த சாலையில் நடந்து செல்லவே மக்கள் தவிர்த்து வருகிறார்கள். தேங்கியிருக்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?