செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையின் இரு புறங்களிலும் கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால் ஜி.எஸ்.டி. சாலை வழியாக செல்லும் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெர்விக்கின்றனர். எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை ஆக்கிரமித்திருக்கும் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.