திருவான்மியூர் ரெயில் நிலையம் அருகே பெருங்குடி, சிறுசேரி, சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம் நோக்கி செல்லும் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. முதியோர்கள், பெண்கள் வெயிலில் நின்றபடியே பஸ்சுக்காக காத்திருக்கிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி மேற்கூறிய பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.