செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பகுதிக்குட்பட்ட நாராயணபுரம் பகுதியில் உள்ள சாலை சேரும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் சேரும், சகதியமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.