திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலகத்திற்கு அருகே அமைந்துள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு செல்லும் நுழைவு வாயிலில் மழை நீர் தேங்கி உள்ளது. இந்த இடத்தை கடந்து செல்லும் மக்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே நோய் தொற்று ஏற்படும் முன்பு கழிவுநீரை அகற்ற கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.