செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூரில் இருந்து மறைமலைநகர் செல்லும் ஜி.எஸ்.டி. சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பலர் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். எனவே விபத்து ஏற்படுவதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை தேவை.