செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே கல்பட்டு பனையடிவாக்கம் கிராமத்தில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்கள் அதிகமானவர்கள் வசித்து வருகிறார்கள். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு சார்பில் நூலகம் அமைக்கப்பட்டது. ஆனால் நூலகத்தில் புத்தகங்கள், மேஜை, நாற்காலிகள் எதுவும் இல்லாமல் வெறும் கட்டிடம் மட்டுமே உள்ளது. எனவே மாணவ மாணவிகளின் நலன் கருதி நூலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.