செங்கல்பட்டு மாவட்டம் சூணாம்பேடு அருகே, ஈசூர் கிராமத்தில் அமைந்துள்ள பஸ் நிறுத்தத்தின் நிழற்குடை சிதலமடைந்து காணப்படுகிறது. ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த நிழற்குடையில் நிற்பதற்கே பயணிகள் அச்சப்படுகிறார்கள். இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் சாலையில் நிற்கும் சூழல் அமைகிறது. சிதிலமடைந்த நிழற்குடை சீரமைக்கப்படுமா?.