செங்கல்பட்டு மாவட்டம், திருச்சியிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை, பரனூர் சுங்கச்சாவடி அருகே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. அந்த பாலத்தின் மீது பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகனத்தில் செல்பவர்கள் சறுக்கி கீழே விழும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. விபத்து ஏற்படும் முன்பு பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டுகிறோம்.