செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு தெருக்களில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றி வருகிறது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி தெரு நாய்களை பிடிப்பதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.