திருவள்ளூர் மாவட்டம் புழல்,காவாங்கரை சுபாஷ் சந்திர போஸ் தெருவின் நுழைவாயில் மற்றும் சாலையில் கழிவு நீர் ஓடுகிறது. அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சுமார் 300 குழந்தைகள் வரை பயின்று வருகின்றனர். தினமும் பள்ளி குழந்தைகள் அந்த வழியாக சென்று வருவதால் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே கழிவுநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.