சென்னை மாதவரம் சூரப்பட்டு பகுதியில் உள்ள ஜே.பி. நகரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி கட்டிடம் நீண்ட நாட்களாக இடிந்து விழும் நிலையிலேயே உள்ளது. மழைக்காலங்களில் வகுப்பறையை மழைநீர் நனைப்பதால் மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே இந்த பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.