திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் புதுமாவிலங்கை கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில் மழை நீர் செல்ல வடிகால்வாய் இல்லை. இதனால் மழை நீர் தேங்குவதும், அதை அகற்ற நாங்கள் சிரமப்படுவதும் ஒவ்வொரு மழை காலங்களிலும் நடக்கும். சமீபத்தில் பெய்த மழையில் சாலையே தெரியாத வகையில் தண்ணீர் தேங்கி உள்ளது. எனவே மழைநீரை அகற்றவும், எங்கள் தெருவில் வடிகால்வாய் அமைப்பதற்கும் நடவடிக்கை தேவை.