சென்னை அயனாவரம் வெங்கடேசபுரம் காலனி விரிவாக்கம் தெருவில் உள்ள சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. கடல் போல காட்சி தரும் இந்த தெருவை கடந்து சென்றாலே நோய் தொற்று ஏற்படும் சூழலில் உள்ளது. எனவே கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.