சென்னை கொரட்டூர் ரெயில் நிலையத்தில் சரியான பார்க்கிங் வசதி இல்லை. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் ரெயில் நிலையத்தின் அருகேயே கட்டிடக் கழிவுகள் கொட்டப்பட்டிருப்பதால் பொதுமக்கள் ரெயில் நிலையம் வந்து செல்ல இடையூரான நிலை ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.