சென்னை கேகே நகரில் அரசு மருத்துவமனைக்கு எதிர் புறத்திலிருந்து கடந்து வருவதற்கு சிக்னல் எதுவும் இல்லை போக்குவரத்து காவலரும் இல்லை. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் சாலையை கடந்து வர சிரமமாக உள்ளது. எனவே அப்பகுதியில் சிக்னல் அமைத்து போக்குவரத்து காவலரையும் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.