செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒரத்தி பகுதியில் உள்ள பஜார் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. சாலை மிகவும் பழுதடைந்து பெரும் பள்ளங்களுடன் இருப்பதால், அதில் மழைநீர் தேங்கி பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சப்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்ய வேண்டும்.