செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திலிருந்து புதுச்சேரி செல்லும் சாலையில், முதுகரை பஸ் நிறுத்தத்தில், கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அங்கு பஸ் நிறுத்தத்தில் இருக்கும் பயணிகள் பள்ளி மாணவர்கள் மீது வேகமாக செல்லும் வாகனங்கள் தேங்கி நிற்கும் தண்ணீரை அவர்கள் மீது அடித்து விட்டு செல்கின்றனர். இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.