செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியிலிருந்து குன்றத்தூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. வாகனத்தில் செல்பவர்கள் சறுக்கி கீழே விழும் நிலையில் சாலை உள்ளது. இதனால் கர்பிணி பெண்கள், முதியவர்கள் இந்த சாலையில் பயணம் செய்யவே சிரமப்படுகிறார்கள். சாலை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?